Header Ads



அக்கரைப்பற்று அல்- முனீறா பெண்கள் உயர்பாடசாலைக்கு பச்சைப் பதக்கம்

(கே.சி.எம்.அஸ்ஹர்)

சுற்றாடல் அமைச்சால் அகில இலங்கை இரீதியாக பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றாடல் முன்னோடிப் பாடசாலை நிகழ்ச்சி; திட்டத்திற்கமைவாக அக்-அல் முனீறா பெண்கள் உயர்பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் சிறப்பாக இயங்கும் மாணவிகளை கௌரவிக்கும் முகமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும்  'சுற்றாடல் படையணிக்கு பசுமைப் பதக்கம் சூடல் எனும் மகுடத்தில் நிகழ்வு  அக்-அல் முனீறா பெண்கள் உயர்பாடசாலையில், பாடசாலை அதிபர், எம்.ஐ.அப்துஸ்ஸலாம் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண சுற்றாடல் பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப் அவர்களும், விஷேட அதிதிகளாக, அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் எ.எல்.எம்.காஸிம் அவர்களும், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஐ. ஹனீபா அவர்களும்;, கௌரவ அதிதிகளாக, அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சி.கஸ்ஸாலி   அவர்களும்,விவசாய ஆசிரிய ஆலோசகர் யூ.எல்.இஸ்தகீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

மாணவிகளுக்கு பதக்கங்கள,; சுற்றாடல் விழிப்புணர்வுத் தொப்பிகள்; ,சான்றிதழ்கள் ,பதிவுப் புத்தகங்கள் என்பன வழங்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றிய மாகாண பிரதிச் சுற்றாடல் பணிப்பாளர், வலயக்கல்விப்பணிபாளர் போன்றோர் சூழலின் முக்கியத்துவம் அதனை பாதுகாக்க கூடிய வழிமுறைகள் எதிர்காலத்தில் எப்படிச் சூழல் நேயப்பாடசாலையாக (முன்னோடிச் சூழல் நேயப் பாடசாலை)கொண்டு செல்லலாம். சூழல் பாதிப்பால் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர்.

மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற ,பிரதி அதிபர்களான,ஐ.எல்.பாஹிம்,எம்.எச்.எம்.றஸ்மி அவர்ளும்,பிரதேச சுற்றாடல் அதிகாரி,எஸ்..எம்.எம்;.றியாஸ்  போன்றோர்,சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.பாடசாலை மாணவியர் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற போது நிச்சயமாக சமூக மட்;டத்தில்  சிறந்த சூழல் விழிப்புணர்வு ஏற்படும். 

No comments

Powered by Blogger.