Header Ads



கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு 8 மாடிகள் கொண்ட உயர்தர வகுப்பறைக் கட்டிடம்

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரியில் 8 மாடிகள் கொண்ட உயர்தர வகுப்பறைக் கட்டிடத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்று(2) திங்கற் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இக் கட்டிடம் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பஸ்லி நிசார் அவர்களின்  நன்கொடை நிதியத்தின் கீழ்  நிர்மாணிக்கப்படுகின்றது.

இவ் வைபவத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, கல்வியமைச்சர் பந்துலகுணவர்த்தன, அமைச்சர்களான ஜீவன்குமாரதுங்க, சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, நன்கொடையாளர் பேராசிரியர் பஸ்லி நிசார், அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சுர் ஆகியோர்கள் இணைந்து இக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.



No comments

Powered by Blogger.