ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலமே உள்ளுராட்சித் துறையின் பொற்காலாம் - அதாஉல்லா
(ஜே.எம்.வஸீர்)
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடத்திற்கான அடிக்கல் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நடப்பட்டது.
இப்புதிய நிர்வாகக் கட்டிடம் 10 மாடிகளைக் கொண்டதாக அமைவதுடன் இதற்காக சுமார் 100 மில்லியன் செலவிடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,
நமது நாட்டை ஆட்சி செய்த முன்னோர்கள் எவரும் உள்ளுராட்சித்துறைய பலப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் நமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே உள்ளுராட்சித் துறையில் பாரிய முன்னேற்றங்கள் கண்டுள்ளது. உள்ளுராட்சித் துறையைப் பொருத்தமட்டில் நமது ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக்காலமே பொற்காலாமாக விளங்குகின்றது எனவும் அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் இன்திக பண்டாரநாயக்க, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் பதில் செயலாளர் ஏ. அப்துல் மஜீட், இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் ஐ.ஏ. ஹமீட், மற்றும் பிரமுகர்களும் அரச உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.



Post a Comment