கெகுணகொல்லை இர்பானிய்யா அரபு இஸ்லாமிய கல்லூரி 9வது ஆண்டில் கால்பதித்தது
குருணாகல் மண்ணில் அறிவு வாசம் வீசும் விசிநவ பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியான கெகுணகொல்லையில் இளம் தாஇகளை உருவாக்குவதற்கு ஐந்து வருட கற்கைநெறியைக் கொண்டியங்குகின்ற இர்பானிய்யா அரபு இஸ்லாமிய கல்லூரி தனது 9வது ஆண்டிலே வெற்றிப் பாதையில் நடைபோட்டு வருகிறது.
கல்லூரி மட்டத்திலும் சமூக மட்டத்திலும் உயிர்ப்புள்ள தஃவா பணியை மேற்கொள்வதற்காக மாணவர் அங்கமாக செயற்பட்டு வருகின்ற மாற்றீட்டுக்கான அல் இர்பான் ஊடக மையம் கல்லூரியின் ஊடகப் பிரிவாக இயங்கி வருகிறது. அதில் பிரதானமாக செயற்படுகின்ற அச்சு ஊடகப் பகுதி இதுவரையில் சமூகத் தளத்திற்கு அல் இர்பான் என்ற பெயரில் 7 பருவகால சஞ்சிகைகளை கொடுத்திருக்கிறது.
கல்லூரி மட்டத்தில் இடம் பெறுகின்ற மாணவர் அபிவிருத்தி நலப்பணிகளில் ஒன்றான இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட (அல்மனாரா அல்கலமிய்யா) சுவர் சஞ்சிகை இந்த ஹிஜ்ரி ஆண்டில் புதுப்பாதை அமைத்துப் பயணிக்கிறது. அதற்கான ஆசிரியர்களும் துணை ஆசிரியர்களும் மாணவத் தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு அதன் ஆசிரியர்களுக்கான சின்னங்கள் இன்று (2013.12.05) அணிவித்து வைக்கப்பட்டது.
இதனை கல்லூரியின் பிரதி அதிபரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க்.ஹிஸ்புல்லாஹ் (அப்பாஸி) அவர்கள் அணிவித்து கௌரவித்ததை படங்களில் காணலாம்.

Post a Comment