Header Ads



பம்பலப்பிட்டியில் சவூதி அரேபிய ராஜதந்திரி சடலமாக மீட்பு

(Adt) சவூதி அரேபிய ராஜதந்திரி ஒருவர் உயிரிழந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி ஆதம் அலி பிளேஸ் பகுதியில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் இருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மாரடைப்பால் இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான சவூதி ராஜதந்திரியின் சடலத்தை மீட்டுள்ள பம்பலப்பிட்டி பொலிஸார் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.