Header Ads



வாகன விபத்தில் 19 வயது மாணவன் வபாத்

(அபூ ஸஹ்லா)                           

மோட்டார் சைக்கிள் விபத்தில் 19வயது மாணவன் ஸ்தலத்தில் உயிரிழந்தார். கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகன்னாவ பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

    கண்டியிலிருந்து மாவனெல்ல நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களும், பஹல கடுகன்னாவ பகுதியில் வைத்து கண்டியிலிருந்து மாவனெல்ல நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸை முந்தி செல்ல முற்பட்ட போது பஸ்ஸில் மோதுண்டு வீதியில் வீழ்ந்த போது, எதிரே வந்த மோட்டார் கார் இவ்விளைஞர்களை காயப்படுத்தி தப்பி சென்றுள்ளது. படுகாயமடைந்த இளைஞரான மாவனெல்ல மஹாவத்தையை சேர்ந்த முஹம்மது ராசீக், முஹம்மது ஹம்ஜாத் எனும் 19 வயதுடைய இளைஞர் ஸ்தலத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மற்றைய இளைஞர் மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் பஸ் வண்டியின் சாரதியை மாவனெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். தப்பி சென்ற மோட்டார் காரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் வலைவிரித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் ஜனாஸா நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஹிங்குலோயா ஜும்மா பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.