Header Ads



தினேஷ் ராஜபக்ஷவின் வீட்டை கொள்ளையிட வந்த 8 பேர் கைது

(ஜே. எம். ஹாபீஸ் - மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை நகர சபையின் உறுப்பினர் தினேஷ் ராஜபக்ஷவின் வீட்டை 2013 12 06  கொள்ளையிட வந்ததாகக் சந்தேகிக்கப்படும் எட்டு சந்தேக நபர்களை தம்புள்ளை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் தாம் மிரிஹான பொலீஸ் நிலையத்தை சேர்ந்த பொலீஸ் அதிகாரிகள் என தெரிவித்துக் கொண்டு வீட்டை திறக்குமாறு கோறி உள்ளனர்.

இது சம்பந்தமாக சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக நகர சபை உறுப்பினர் அதற்கு இணங்காது அயலவர்களுக்கும் பொலீஸாருக்கும் அறிவித்துள்ளார்.
ஆதன் பின் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்று கொண்டிருந்த சந்தேக நபர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை  தம்புள்ளை நீதி மன்றில்  ஆஜர் செய்யப்பட்ட போது எதிரவரும் ஒன்பதாம் திகதி வரை விளக்க மறியளில் வைக்குமாரு தம்புள்ளை மேலதிக நீதவான் ஜயம்பதி ஏக்கநாயகக் உத்தரவிட்டார்.

சுந்தேக நபர்கள் குருனானளை, மாத்தளை. கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாலம் கானப்பட்டுளள்னர்.

No comments

Powered by Blogger.