Header Ads



மனைவியை விற்பனை செய்ய முயன்ற கணவன் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தாலி கட்டிய மனைவியையே அடுத்தவருடன் தகாத நடத்தையில் ஈடுபடும் படி வற்புறுத்திய கணவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிறிதொரு ஆணுடன் தகாத நடத்தையில் ஈடுபடும்படி தனது மனைவியை குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மனைவி கடந்த 28 ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரின் வீட்டுக்கு வவுனியாவிலிருந்து வந்துள்ள பெண் ஒருவரும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதன் அடிப்படையிலேயே குறித்த நபரும் தனது மனைவியை தவறான நடவடிக்கைக்கு வலியுறுத்தியதாகவும் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.