கல்முனை இஸ்லாமாபாத் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு விழா
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை மாநகர சபையினால் கல்முனையிலும் ,மருதமுனயிலும் இரண்டு முன்பள்ளி பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன. அப்பாடசாலைகளில் ஒன்றான கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில் நடாத்தப்படும் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு விழா கொட்டும் மழையிலும் பூட்டிய அறையில் திட்டமிட்டபடி 06.12.2013 இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் நடை பெற்றது.
முன்பள்ளி மாணவர்களின் இந்த விளையாட்டு விழாவில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி , மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கல்முனை முஸ்லிம் பிரதேச அமைப்பாளருமான ஏ.எம்.றியாஸ் உட்பட கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Post a Comment