எவர் எப்படியான விமர்சனங்களை முன்வைத்தாலும் நாங்கள் முன்னோக்கிச் செல்வோம் - ஜனாதிபதி மகிந்த
அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவே அரசாங்கம் கடனை பெற்றது ஆனால் அதனை விமர்சிப்போர் பாண் உண்பததற்காக கடனை பெற்றனர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹொரணை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கலையரங்கம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 382 மில்லியன் ரூபா கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான நிதியுதவிகள் 117 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பற்றி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசவில்லை. அத்துடன் பிரிவேனாவில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
எவர் எப்படியான விமர்சனங்களை முன்வைத்தாலும் நாங்கள் முன்னோக்கிச் செல்வோம். நாட்டை கட்டியெழுப்பும் தேவையே எமக்குள்ளது.
நாட்டில் இன்று புனரமைக்கப்படாத வீதிகளே கிடையாது. வடக்கை அபிவிருத்தி செய்யும் பொழுது எம்மை விமர்சிக்கின்றனர். கடன் பெறும் போது விமர்சிக்கின்றனர். அவர்கள் பாண் உண்பதற்கு கடன் பெற்றனர். நாங்கள் அபிவிருத்திக்காக கடன் பெறுகிறோம்.
அதிவேக வீதி ஒன்றை நிர்மாணிக்க 1986ம் ஆண்டு ஜப்பானிடம் இரந்து 568 மில்லியன் யென்களை பெற்றுள்ளனர். எந்த அதிவேக வீதிகளும் நிர்மாணிக்கப்படவில்லை. நாங்கள் கடன் பெற்றோம் அதிவேக வீதிகளை நிர்மாணித்தோம் என்றார்.


Post a Comment