Header Ads



6 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கடற்படை வீரரை பிடித்து, மரத்தில் கட்டிய பொதுமக்கள்

(மொஹொமட் ஆஸிக்)

 ( ஆறு வயது 11 மாதம்)  சிறுமி ஒருவரை பாலியல் வல்லுரவிற்கு உற்படுத்தியதாக கூறப்படும் கடற்படை வீரர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து மரத்தில் கட்டி  பின் கட்டுகஸ்தோட்டை பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கண்டி நகருக்கு அன்மித்த பாடசாலை ஒன்றில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் இம் மாணவி தனது வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அயலில் வசிக்கும் சந்தேக நபரான இக் கடற் படை வீரர் மலர் ஒன்றை கான்பித்து சிறுமியை ஏமாற்றி அவரது வீட்டுக்குள் கூட்டிச் சென்று இவ்வலுரவை புறிந்துள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வல்லுரவை புறிந்ததாக கூறப்படும் சந்தேக நபர் பிரதேச மக்களால் கடுமையாக தாக்கப்படடுள்ளதால் சிகிற்சைக்காகவும் வல்லுரவிற்கு உற்படுத்தப்பட்டுள்ள சிறுமியும் கண்டி போதனா வைத்திய சாiலியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.



No comments

Powered by Blogger.