Header Ads



தஃவாவை புரிந்து கொள்ளலும் நடைமுறைப்படுத்தலும் சில சிந்தனைகள்

(தாரிக் ஸம்ஊன்)

 இஸ்லாத்தின் நடைமுறைத் தன்மையை எப்போதும் எளிலோடு பேணிப்பாதுகாக்கும் அற்புதமான பொறிமுறையே தஃவா ஆகும்.அழைப்பியல் என நேரடிப் பொருள் தரும் தஃவா செயன்முறை இறுதி தூதரின் சமூகம் சுமந்து கொண்ட மகத்தான பணியாகும்.

 அல்லாஹ்வின் பாலும் அவன் தூதரின் பாலும் அவன் மார்க்கத்தின் பாலும் அழைத்தல் என்று தஃவாவை வறைவிலக்கணப்படுத்தலாம்.இது தஃவா என்பதின் முழுமைத்தன்மையை பிரதிபலிக்கவில்லை எனலாம்.

 'விவேகத்துடனும் அழகிய அறிவுறையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!' (16 – 125)

மேற்சொன்ன வசனத்தில் அழைத்தல் என்ற சொல் பிரயோகிக்கப்பபட்டுள்ளது.இதனூடாக அழைத்தல்,கூப்பிடுதல்,சொல்லுதல் என்ற மொழியூடக செயன்முறை மட்டும்தான் தஃவா என புரிந்துக்கொள்ளக் கூடாது.

 இன்று தஃவாவை வறையறுக்கப்பட்ட அல்லது இறுக்கமான செயன்முறையாக பார்க்கும்போக்கு அதிகரித்து வருகிறது.அகவே அதன் நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கள்கள் உள்ளன.அதனை புரிந்து கொள்வதில் இருக்கின்ற சிக்கள்கள்தான் நடைமுறையில் பிரதிபலிக்கின்றது என்றே தோன்றுகிறது.

 தஃவாவின் அடிப்படையாக அழைத்தல்,பேசுதல் போன்ற மொழியூடக செயன்முறையை கொள்ளலாம்.தஃவாவின் முழு வடிவமுமே அதுவல்ல.முஹம்மத் (ஸல்)அவர்கள் தஃவாவுக்கான அடிப்படையாக மொழியூடக செயன்முறையை கையான்டார்கள் என்பது உண்மையே.ஆயினும் அதற்கு அப்பால் வேறு வழிமுறைகளையும் கையான்டார்கள் என்பதையும் கவனத்திட் கொள்ள வேண்டும். 

தஃவாவை இப்படியும் வறைவிலக்கணப்படுத்த முடியும். 'அடிப்படை இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப முழு மனித சமூகத்திற்கும் இஸ்லாமிய வாழ்வியலை கொண்டு சேர்க்க முயலும் எல்லா வழிமுறைகளும் தஃவா ஆகும்'.மேற்சொன்ன வறைவிலக்கணம் தஃவா செயன்முறையை பரந்தளவில் பார்க்க வழி செய்கிறது.மொழியூடக செயன்முறையோடு தஃவாவை மட்டுப்படுத்திக்கொள்வதானது நிறைய நடைமுறை சிக்கல்களை தோற்றுவித்துள்ளன.இதிலிருந்து விடுபட தஃவாவை பரந்தளவில் புரிந்த கொள்வது பொறுத்தமானதாகும்.

தஃவாவும் வாழ்க்கையோட்டமும்

 இலங்கையில் சிறுபான்மை சமூக ஒழுங்கில் முஸ்லிம்களின் தஃவா பல்வேறு பரிமாணங்களை கடக்க வேண்டியுள்ளது.தஃவாவை பற்றிய கதையாடலை துவங்கும் முன்பே எல்லோர் மனதிலும் முதலில் வருவது தஃவா நிறுவனங்களும் இயக்கங்களும்தான்.இயக்கங்களை புறந்தள்ளிய தஃவா சத்தியமற்றதாக அல்லது தஃவாவே அல்ல என்றவாறான மனப்பதிவு உருவாகியுள்ளது.

 ஒரு முஸ்லிமை பொறுத்தவரை தஃவா என்பது அவனது வாழ்வோடு இரண்டரக் கலந்தது.வாழ்விலிருந்து பிரிக்க முடியாதது.வாழ்வியல் நிகழ்வுகளோடும் நிதர்சனங்களோடும் கலந்த ஒன்றாகவே தஃவா அமைய வேண்டும்.

 மொழியூடக செயன்முறையோடு தஃவாவை வறையறுக்க முற்படும் போதுஅதன் செயற் தளமும் குறுக்கப்பட்டுவிடுகின்றது.பேசுதல்,அழைத்தல்,பரப்புதல் என்ற படிமுறைகளை நடைமுறைப்படுத்த மேடைகளும் கருத்தரங்குகளும் செயலமர்வுகளும் பயன்னடுத்தப்படுகின்றன.இதனை மட்டுமே தஃவா செயன்முறையாக கருதும் போது அதனை தவிர்த்த வாழ்வியல் நிகழ்வுகளை தஃவாவின் களமாக பயன்படுத்தப்படாத சூழ்நிலை உருவாகின்றது.

 சிலர் தஃவாவுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என நினைக்கின்றனர்.அதன் மூலம் தஃவா அமைப்புக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தஃவா நிகழ்சிகளையே கறுதுகின்றனர்.இது பிழையல்ல.ஆனால் தஃவா பிரக்ஞை கொண்ட குறித்த நபர் தான் பணி புரியும்,அதிக நேரம் செலவிடும் தனது சூழலில் இந்த தஃவாவை எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.தான் பணி புரியும் சூழலில் மௌடீகங்களும் ஜாஹிலிய்யத்தும் நிறைந்திருக்கும் போது அதனை மெல்ல மாற்ற முயழும் செயன்முறையையும் தஃவா என புரிந்துகொள்வோம்.இப்படி தஃவாவை புரிந்து கொண்டால் வாழ்வியல் யதார்த்தங்களோடு இணைக்கலாம்.இல்லையெனின் வாழ்வையும் தஃவாவையும் வௌ;வேறாக பிரித்ததாக அமையும்.

 நுபி (ஸல்)அவர்களின் தஃவா,வாழ்வியல் நிகழ்வுகளோடு பயணித்தது.ஒரு பக்கம் தனது சுயத்திற்காக சமூகத்தோடு இணைந்து வாழந்து விட்டு வேறு நேரம் ஒதுக்கி தஃவா செய்ததாக நபியவர்களின் வாழ்விலே நாம் காண முடியாது.நபிகளார் தனது குடும்ப,வியாபார,சுய தேவைகளில் அக்கறை செலுத்திய அதே சமகாலத்தில் அந்த ஒவ்வொறு துறைகளிலும் தஃவாவுக்கு செயல் வடிவம் கொடுத்தார்கள்.அங்கே நபிகளாரின் வாழ்வியல் நிகழ்வுகளிலிருந்து தஃவா விலகி பிரிந்த ஒன்றாக இருக்கவில்லை.

 மக்கா தஃவா காலத்தின் போது நபிகளாரை பார்த்து அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்.
 'முஹம்மதே! உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக' (26 – 214)
  பாசமும் நேசமும் பாராட்டும் உறவினர்களிடையே தஃவாவை நடைமுறைப் படுத்துமாறு அல்லாஹ் கூறுகிறான்.இங்கே உறவுகளுடனான நேசம் பாராட்டும் வாழ்வியல் நிகழ்வை தஃவாவோடு இணைக்கின்றான்.
 
 18ம் நூற்றாண்டுகளின் பின்னரான இஸலாமிய இயக்கங்களின் தோற்றம் நல்ல பல விளைவுகளை இஸ்லாத்திற்கு தந்துள்ளன.இஸ்லாமிய வரலாற்றில் புதிய செல்திசைகளை கடந்து செல்லும் ஒரு முக்கிய கட்டமாக இஸலாமிய இயக்கங்களின் தோற்றத்தை குறிப்பிடலாம்.தஃவா தொடர்பான நிறுவனமயப்பட்ட செயற்திட்டங்கள் இங்குதான தோற்றம் பெறுகின்றன.

 இஸ்லாமிய இயக்கங்களின் மிகை செயற்பாடுகள், தஃவா குறித்து ஏற்கனவே இருந்த வரலாற்று மனோநிலையை பெரிதும் மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.இன்று தஃவாவை ஒரு நிறுவனமயப்பட்ட செயன்முறையாகவே அதிகம் பார்க்கின்றனர்.தஃவா செய்வதென்றாலே இயக்கமும் நிறுவனமும் அவசியம் என நினைக்கின்றனர்.ஆனால் தமது அன்றாட வாழ்வில் தஃவாவை இணைக்க மறந்து விடுகின்றனர்.

 இப்படி நிறம்தீட்டுவதால் தஃவா இயக்கங்கள் மீது தவரான அபிப்பிராயம் கொள்வதற்கல்ல.இன்றுள்ள சிக்கலான உலகில் நிறுவனமயப்பட்ட தஃவா மிகப்பொருத்தமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆயினும் தஃவாவை நிறுவன செயன்முறையாக மட்டும் பிரித்துப் பார்க்கும் மனோநிலை உலமாக்களிடமும் தாயிகளிடமும் வளர்ந்து வருகின்றது.பொது தளத்தில் இந்த மனோநிலை களையப்பட் வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.    

No comments

Powered by Blogger.