அக்குறணை பிரதேச சபையின் 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை பிரதேச சபையின் 2014 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று 2013 12 05 ம் திகதி ஏகமனதாக நிரைவேற்றப்பட்டது.
அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் முன்வைத்த 2014 ம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் ஐந்து கோடி ஐம்பத்தி இரண்டு இலட்சத்து நான்காயிரத்தி என்னூற்றி ஐம்பது ரூபாய் ஆகும்.(5,52,04,850.00) 2014 ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மொத்த செலவினம் ஐந்து கோடி ஐம்பத்து ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரத்து எழு நூற்று அறுபது ரூபாய்கள் ஆகும். ( 5இ51இ75இ760.00)
அலவத்துகொடை ஜானக வரவேற்பு மண்டபத்தில் இன்று இடம் பெற்ற விஷேட பொதுக் கூட்டத்தில் தலைவர் ஏ.ஏ.எம். சிம்சான் முன்வைத்த 2014 ம் ஆண்டிக்கான வரவு செலவுத் திட்டத்தை உப தலைவர் அமரஜிவ இந்திரகுமார பிரேரித்து எதிர் கட்சி தலைவர் அஜ்மிர் பாரூக் ஆமோதித்து எதிர்ப்புகள் இன்றியும் வாக்கெடுப்பின்றியும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
.jpg)
Post a Comment