சுனாமியும், சவூதி அரேபியாவின் 500 வீடுகளும்
(எம்.ஏ.றமீஸ்)
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து ஒன்பதாண்டு நினைவையொட்டி அம்பாறை மாவட்ட பிரஜைகள் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களின் தலைவர் ஹம்ஸா சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அனர்த்தங்களின்போது உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி மற்றும் விஷேட துஆப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றதுடன், அனர்த்தங்களின்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் கலந்து கொண்ட அதிதிகளால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர்,அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரஜைகள் முன்னணியின் தலைவர் அன்வர் நௌசாத், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ் மற்றும் ஏ.எஸ்.எம்.உவைஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், அம்பாறை மாவட்ட பிரஜைகள் சமூகத்தின் அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது உரையாற்றிய அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்சில் குறிப்பிடுகையில், சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து ஒன்பது வருடங்கள் கடந்த நிலையில் நாம் இன்னும் மீளாத்துயரில் இருக்கின்றோம். அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களுக்காக நாம் அவர்களின் ஈடேற்றம் வேண்டி பிரார்திக்கின்றோம்.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தபோது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறான உதவிகள் கிடைத்தன. இருந்தபோதிலும் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் எவ்வித உதவிகள் கிடைக்காமலும் உள்ளனர். அந்தவகையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதி அரேபியா அரசாங்கத்தினால் கட்டப்பட்ட 500 வீடுகள் இன்னும் கையளிக்கப்படாமல் உள்ளன.
வீடு கையளிக்கும் விடயம் சம்பந்தமாக இன்னும் நீதிமன்ற வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்படாத பெரும்பான்மை இனத்தவர்கள் நேற்றிரவு அத்து மீறி குடியேறியுள்ளனர். இதைக் கேள்வியுற்றபோது நாம் மிகுந்த கவலையடைந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால நிலை குறித்து அச்சப்படவேண்டியுள்ளது. இது சம்பந்தமாக எமது தலைவரின் கவனத்திற்கும்,அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குமாக நாம் தெரியப்படுத்தியுள்ளோம்.



நடந்து முடிந்ததை நினைவு கூர்வதைவிட அந்த 500 வீடுகளை பெற்றுத்தறுமாறு ரவுப் ஹக்கீம் பௌஸி அதாவுல்லா ரிசாத் பதியுத்தீன அஸ்வர்... போன்ற முஸ்லிம் 'தலைவர்களிடம்' முறையிட்டால் உடன் தீர்வு கிடைக்குமல்லவா....?????? அதை விடுத்து... அந்த 500 வீடுகளும் 'இன்னும் முஸ்லிம்களிடம் கையளிக்கப்பட வில்லை என்பதை சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்டவர்களிடமாவது இந்த 'தலைவர்கள்' முறையிட்டார்களா.. என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
ReplyDelete