Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யின் உண்ணாவிரதம் 2வது நாளாக தொடருகிறது

(Adt) ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் வெல்லவாய பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் திலீப் பிட்டிகல ஆகியோர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் (26) தொடர்கிறது. 

பதுரலிய வைத்தியசாலைக்கு முன்னால் இவர்கள் நேற்று (25) முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறன்றனர். 

மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்கக் கோரி இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

நேற்று இரவு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்கு இலக்கானதாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.