இலங்கையில் 2013 ஆம் ஆண்டில் அதிகளவான ஊழல், மோசடி முறைப்பாடுகள்
2013 ஆம் ஆண்டில் அதிகளவான முறைப்பாடுகள் கல்வித்துறைச் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ளதாக ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, ஆணையகத்தின் தலைவர் எஸ்.பாலபட்டபெந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஊழல் தவிர்ப்பு ஆணையகத்தின் அறிக்கைகளுக்கு அமைய 369 முறைப்பாடுகள் கல்வித்துறை சார்ந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், காவல்துறைக்கு எதிராக 225 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
காவல்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு எதிராக கல்வித்துறைக்கு அடுத்த படியான எண்ணிக்கையில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 9 முறைப்பாடுகள் தமது ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தலைவர் எஸ்.பாலபட்டபெந்தி தெரிவித்தார்.
பிரதேச சபை மற்றும் நகர சபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் இந்த வருடத்தில் 111 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment