சவூதி அரேபியாவிலிருந்து ஒரு மாதத்திற்குள் 126,000 வெளிநாட்டு தொழிலாளர் நாடுகடத்தல்
சவூதி அரேபியாவில் ஒரு மாதத்திற்குள் 126,000 க்கும் அதிகமான சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
சவூதியில் முறையான ஆவணமின்றி தங்கியிருக்கும் வெளி நாட்டு தொழிலாளர்க ளுக்கான பொது மன்னி ப்பு காலம் முடிவடைந்து கடந்த நவம்பர் 4ம் திகதி தொடக்கம் அவர்களை பிடிக்கும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு பிடிபடுவோரில் பெரும்பாலானோர் அந்நாட்டு கடவுச் சீட்டு திணைக்களத்தினூடே சிவில் விமானப் போக்குவரத்து பொது நிர்வாக சபை மூலம் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இதன்படி இதுவரையில் பல நாடுகளையும் சேர்ந்த 140,000 க்கு அதிகமான சட்டவிரோத வெளிநாட்டு பணியாளர்கள் பிடிப்பட்டுள்ளனர். இவர்களில் 126,000க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டிருப்பதாக சவூதி கடவுச்சீட்டு திணைக்கள வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment