ஷியா ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் சிரேஷ்ட தளபதி படுகொலை
லெபனான் ஷியா ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவின் சிரேஷ்ட தளபதிகளில் ஒருவர் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று கொல்லப் பட்டுள்ளார்.
தென்கிழக்கு லெபனானின் ஹதத் பகுதியில் இருக்கும். தனது வீட்டுக்கு அருகில் வைத்து ஹஸ்ஸன் லக்கிஸ் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹிஸ்புல்லா தொலைக்காட்சி சேவையான அல்மனார் தெரிவித்துள்ளது. இந்த கொலைக்கு ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது குற்றம்சாட்டிய போதும் இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது.
லக்கிஸ் பொதுமக்களிடம் அதிக பிரபல்யம் இல்லாத போதும் அவர் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வுக்கு மிக நெருங்கியவர் என கருதப்படுகிறது.
ஈரானின் ஆதரவுடன் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய யுத்தத்தில் பஷர் அல் அஸாத் அரசுக்கு உதவியாக தனது போராளிகளை அங்கு அனுப்பியுள்ளது. சிரிய உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக அதன் சிறிய அயல் நாடான லெபனானில் மதப் பிரிவினை மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், லக்கிஸ் பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் போது கொல் லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரை கொல்ல இஸ்ரேல் இதற்கு முன்னர் பலமுறை முயற்சித்த போதும் அவை தோல்வியடைந்ததாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.
லக்கிஸ் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஆயுததாரிகள் காத்துநின்று துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ. பி. செய்தி வெளியிட்டு ள்ளது.
இந்த கொலை யுடன் எந்த தொடர் பும் இல்லை என இஸ்ரேல் மறுத்துள்ளது. “இந்த தானாக குற்றம்சாட்டும் பழக்கம் ஹிஸ்புல்லாவின் உடன்பிறந்தது. அவர்களுக்கு உண்மை தேவையில்லை, ஆதாரங்கள் தேவையில்லை, ஏதாவது நடந்தால் அவர்கள் உடனடியாக இஸ்ரேலை குற்றம் சாட்டுகிறார்கள்” என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் யிகால் பெல்மோர் குறிப்பிட்டார்.

Post a Comment