12 மணிநேரத்தில் 220 சாரதிகள் கைது; குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் கைது
பொலிஸாரினால் சுமார் 12 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்னையின் போது குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடிபோதையில் பஸ் செலுத்திய ஒருவர், மோட்டார் சைக்கிள் செலுத்திய 111 பேர், முச்சக்கர வண்டி செலுத்திய 75 பேர், வேறு வாகனங்கள் செலுத்திய 33 பேர் என மொத்தம் 220 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.jpg)
Post a Comment