நடிகர்களும், கிரிக்கட் வீரர்களும் அரசியலை பலவீனப்படுத்துகின்றனர் - ரணில் கவலை
நடிகர்களும் கிரிக்கட் வீரர்களும் அரசியலை பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலில் களமிறங்கும் சில நடிக, நடிகையரும், கிரிக்கட் வீரர்களும் முழு நேர அரசியலில் ஈடுபடுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு அளவில் அர்ப்பணிப்புடன் அரசியலில் ஈடுபட முடியாவிட்டால் கலைஞர்கள் விளையாட்டு வீரர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜயகுமாரதுங்க அரசியலில் பிரவேசித்த போது அவர் சினிமாத் துறையிலிருந்து விலகியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்காலத்தில் சில கலைஞர்கள், கிரிக்கட் வீரர்கள் நூறு வீதம் அரசியலில் பங்களிப்பினை வழங்குவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். gtn

Post a Comment