திருகோணமலையில் நீர் அருந்த முற்பட்ட மானுக்கு ஏற்பட்ட பரிதாபம் (படம்)
திருகோணமலை மாவட்டத்தில் நீர் அருந்த முற்பட்ட வேளையில் மான் ஒன்று அசாம்பாவித சம்பவமொன்றை எதிர்நோக்க நேரிட்டது. இச்சம்பவம் நேற்று திருகோணமலை மாவட்டத்தில் இட்ம்பெற்ற்து.
கடற்படையின் தொழில்நுட்ப கல்லூரியின் முகாம் அருகே அலைந்து திரிந்த மான் ஒன்று நீர் அருந்த முற்பட்ட வேளையில் அதன் கொம்பானது வாளிக்குள் சிக்கிக் கொள்ள அது முகத்தை வாளியினுள் இருந்து எடுக்க முடியாமல் தவித்தது.
கடற்படையினர் தெடர்ச்சியாக பல தடவைகள் முயன்ற போதிலும் மான் பதற்றமடைந்ததன் காரணமாக அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
அதன்பின் அங்கு விரைந்து வந்த கிரிதல வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவப் பிரிவினர் நீண்ட பிரயத்தனங்களை மேற்கொண்டு இரண்டு மணித்தியால நீண்ட முயற்சிகளின் பின்னர் மானை மீட்டுள்ளனர்.

Post a Comment