Header Ads



மொரட்டுவ பல்கலைக்கழக நிகாப் விவகாரம் - சுமூக தீர்வுக்கு அமைச்சர் எஸ்.பி. உறுதி

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் சகோதரி ஒருவர் நிகாப் அணிந்து சென்றபோது அப்பல்கலைக்கழக பீடாதிபதியினால் நிகாப்பை அகற்றுமாறு வற்புறுத்தப்பட்டிருந்தார். இந்த விவகாரம் ஹுனைஸ் பாருக் எம்.பி.க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ள அவர் இதுதொடர்பில் உயர் கல்வியமைச்சருக்கு உடனடியாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா, நிகாப் விவகாரத்தை உடனடியாக தீர்த்துவைப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக ஹுனைஸ் பாருக் எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்தின் கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பியிருந்த SMS இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


2 comments:

  1. What is big deal SL Morotuwa university got on Niqab???, Students at Haward university in USA and University of Toronto in Canada are allowed to follow leactures with Niqab. Where is freedom of religion in SL banana republic?

    ReplyDelete
  2. ஹுனைஸ் fபாரூக் (MP) அவர்களுக்கு நமது சமூகத்தின் சார்பாக நன்றிகள்(JAZAKKALLAHU KHAIRA) உங்களது பணி நமது சமூகத்திற்கு தொடர்ந்து கிடைக்க வேண்டுமென அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்!

    ReplyDelete

Powered by Blogger.