Header Ads



குர்பான் (உழ்கியா) விடயத்தில் அவதானமாக செயற்படுவோம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களுக்கு அமைவாக உழ்கியா எனும் குர்பான் கடமையை மேற் கொள்வோமானால் எவரும் அவற்றை குறை கூறவோ அல்லது முட்டுக்கட்டை போடவோ வாய்பிருக்காது. ஆனால் நாமே நமக்கு மண்னை வாரும் நிலைமைகளை ஏற்படுத்தவதனால் மற்றய சமுகம் குறைகூறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

இன்று முஸ்லிம்கள் தமக்கு கடமையான இவ்வாறான விடயங்களில் கடமை நிறைவேற்றப்படவிருக்கும் மிருகங்களையும், மற்றயவர்களையும் மதிப்பதுடன் இஸ்லாத்தில் குறிப்பாக அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் குறிப்பிட்டதுபோல் புனித கடமையை அல்லாஹ்வுக்கு பயந்து பேனுதலுடன் செய்யவேண்டும்.

ஆனால் இன்று ஹஜ் மாதம் வந்துவிட்டால் ஒரு சிலருக்கு குர்பான் வியாபாரமாக மாறிவிடுகின்றது இலங்கையில் ஹஜ் கடமை வியாபாரமாக மாறியுள்ளதுபோல் குர்பான் விடயமும் தற்போது வியாபாரத் தோரணையில் இடம்பெறுவதால்தான் மற்றய சமுகம் அதில் வெறுப்படைந்து கடமையை நிறைவேற்றுவதற்கு ஏதோ ஒரு விதத்தில் முட்டுக்கட்டைகள் போடுகின்றனர்.

கடந்த காலங்களில் பல இடங்களில் குர்பான் விடயத்தில் பல பிரச்சிணைகளுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்கவேண்டிய நிலைமகள் காணப்பட்டன. காரணம் சட்டதிட்டங்களை அறிந்து செயற்படாது குர்பான் கொடுத்த மிருகங்களின் கழிவுகளை பாதையோரங்களிலும், பொது இடங்களிலும் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கழிவகளை வீசிவிடுவதேயாகும்.

மேற்படிச் செயற்பாடுகள் காரணமாக பொலிஸ் விசாரணைகள், மற்றும் நீதிமன்றத்திறகுகச் சென்ற விடயங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளது. காரணம் குர்பான் விடயத்தில் இஸ்லாம் சொன்னபடி  மேற்கொள்ளாமையே மூலகாரணமாகும்.

ஒரு சிலர் குறித்த வியத்தில் சண்டியர்கள்போல் நடந்து கொள்கின்றனர் இது குர்பான் விடயத்தில் தவிர்க்கப்படவேண்டும். மார்க்கம் என்பதற்காக வரைறறைகள் இல்லாமல் எதிலும் செயற்பட முடியாது என்பதனை குர்பான் கொடுக்கும் நபர்கள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இலங்கையில் இன்று சமயங்களை முடக்கும் இனவாதம் தலைதூக்கி உள்ள நிலையில் பொதுவாக நிறைவேற்றும் மார்க்க விடயங்களில் மிகவும் அவதானமும் பக்குவமும் தேவை. ஏனெனில் ஒரு சிறு பிழைகளைக் கூட பெரிதாக்கி அவற்றை விஸ்பரூபமாக்கி விட இனவாதிகள் கங்கனங்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நகரப் புறங்களிலம், பெரும்பான்மை மக்கள் அதிகமாக செறிந்த வாழும் பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள் குர்பான் கொடுக்கும் விடயத்தில் மிக மிக அவதானத்துடன் அக்கடமையை நிறைவேற்ற முயலவேண்டும்.

கொழும்பு போன்ற நகரப் புறங்களில் உள்ளவர்கள் குர்பான் கொடுக்க இருக்கும் ஆட்டையோ அல்லது மாட்டையோ அவற்றை பாதைகளிலும், மக்கள்போகும் இடங்களிலும் நாள் கணக்கில் கட்டி வைத்தல் அவை மூலம் அப்பகுதி சுகாதாரத்திற்கு இடஞ்சல்களை விளைவித்தல் போன்ற விடயங்களில் இருந்து முற்றாக தவிர்ந்து கொள்வதே மிகச் சிறந்ததாகும்.

இஸ்லாத்தில் குர்பான் கொடுக்கும்படி குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதற்காக மற்றய சமுகத்தின் மனோ நிலைமைகளைப் பரிந்து கொண்டு இடையூறுகளை ஏற்படுதாத வகையில் குர்பான் கொடுப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது. அதுவே சிறந்த வழிமுறையுமாகும்.

பெரும்பான்மை மக்கள் வாழும் கொழம்பு போன்ற பகுதிகளில் கூடிய தொகையில் குர்பான் கொடுக்கும் நபர்கள் அல்லது குழுக்கள் இருப்பின் அப்பகுதி பொலிஸாரின் அனுமதிகளைப் பெற்றுக் கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகிக் கொள்ளலாம் இல்லாவிட்டால் குறித்த தினங்களில் தேவையற்ற பிரச்சினைகளுக்கே முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

குர்பான் கொடுப்பவர்கள் முதலில் நாட்டின் சட்டங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் இலங்கையில் பெரும்பான்மையாக காணப்படுபவர்கள் பௌத்தர்கள் இவர்களில் அதிகமானவர்கள் மிருகங்கள் கொல்லப்படுவதை விரும்புவதில்லை இவர்கள் மாடுகளை புனிதமாக நினைப்பவர்கள்  இந்தவகையில் அவர்களின் வெறுப்புக்ளுக்கு ஆளாகாமல் தற்போது நகரப்பகுதிகளில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் காணப்படுகின்றன இவை மூலம் இணைந்து கூட்டாக செயற்பட்டால் குர்பான் கடமையை சிறப்பாக மேற் கொள்ளலாம்.

இன்று தீய சக்கதிகள் முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்தவும், சண்டைக்க வரவும் கங்கனங்கட்டிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் முஸ்லிம்கள் குர்பான் விடயத்தில் பொடுபோக்காக இருந்துவிடக்கூடாது அவ்வாறு இருந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் சக்திகளுக்கு அது சாதகமாக ஆகிவிடும் இந்த நிலைமைகளுக்கு வழிவகுத்துவிட்டு முழு முஸ்லிம் சமுகத்திற்கும் இழுக்குகளை ஏற்படுத்திக் கொடுக்காது இருக்க ஒவ்வொரு முஸ்லிம்களும் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

குர்பான் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை அல்லவென்றாலும் அதை எமது பரம்பரையினர் காலாகாலமாக செய்து வருகின்றனர். இந்த விடயங்களில் காலத்திற்கும், சமூக அமைப்பகளுக்கும் எற்ற விதத்தில் சுற்றாடல்களுக்கு பாதிப்பக்கள் ஏற்படாத வன்னம் உணர்ந்து செயற்படுவதே சிறந்தது.

முடியுமானவர்கள் பெரும்பான்மை வாழும் பகுதிகள் வைத்து  கொடுப்பதை தவிர்த்து முஸ்லிம்கள் செறிந்த வாழும் பகுதிகளில் குர்பான் கடமையை நிறைவேற்றினால் இஸ்லாத்தின் பார்வையில் அது சிறந்ததாகவும் சமூகக் கடமையாகவும் மற்றய சமுகத்தை மதிப்பதாகவும் அவர்கள் எம்மை தவறாக புரிந்து செயற்படும் நிலைமைகளில் இருந்து மாறுபடவும் இஸ்லாத்தின் நற்போதனைகளை மற்றய சமுகம் புரிந்து கொள்வதற்கும் இதுபோன்ற இஸ்லாமியக் கடமைகள் நிச்சயம் வழி வகுக்கும்.

எனவே இஸ்லாமியச் சிறந்த வழிமுறைகளை முஸ்லிம்கள் கடைப்பிடிப்பதன் மூலமே மற்றய சமுகம் இஸ்லாத்தைப் பரிந்து கொள்ளும் என்ற தூர நோக்குடன் முஸ்லிம்கள் செயற்பட அல்லாஹ் அருள் பரிவானாக. (ஆமீன்)

No comments

Powered by Blogger.