சிலாவத்துறைக்கு செல்லும் பிரதான வீதியில் உடைவுகள் - மழை காலத்தில் ஆபத்து (படங்கள்)
(எச்.எம்.எம். வாஜித்)
முருங்கள் இருந்து சிலாவத்துறை செல்லும் பிரதான வீதி, சில இடங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறு பல முறை உடைந்துள்ளன இதே போன்று பொற்கேணியில் இருந்து பண்டாரவெளி செல்லும் வீதி செய்யப்பட்டடு ஒரு சில மாதங்களில் முற்றாக உடைந்து தற்போது பாவனைக்கு செல்ல முடியாத நிலையில் காணப்படுவதாக பாதசாரிகள்.வாகன சாரதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
ஒரு சில ஒப்பந்தகார்கள் தங்களின் வருமானங்களை அதிகரித்து கொள்வதற்காக மக்களின் நலன் விடயத்தில் அதிகமாக கவனம் செலுத்துவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன
தற்போது மன்னார் பிரதேசத்தில் மழை காலம் என்பதனால் அதிகமான மழை பொளிந்தாள் சில பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைபடும் அபாயம் உள்ளது
கடந்த முறை பெய்த மழையினால் அருவயாற்று பாலத்தினால போக்குவரத்து தடை பெற்றது இம்முறையும் அவ்வாரான நடவடிக்கை இடம்பெறாமல் இருபதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு மக்கள் வேண்டி கொள்கின்றனர்.


Post a Comment