Header Ads



தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளை குத்தகைக்கு வழங்குவது..!

(பி.எம்.எம்.ஏ.காதர்)

தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக கேள்வி கோரப்படுவது சட்ட முரணணா விடையமாகும் எனத்தெரிவித்து கல்முனை மாநகர ஆணையாளருக்கு, கல்முனை மாநகரசபையின் ஐக்கி மக்கள்  சுதந்திர முன்னனி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

;அந்தக் கடிதததில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கட்டிடங்களில் மாட்டிறைச்சிக் கடைகளை நடாத்துவதற்கான கேள்வி கோரல் விண்ணப்பம் வருடா வருடம் கோரப்படுவது வழமையாகும்.

ஆனால்  தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக கேள்வி கோரப்படுவது சட்டத்திற்கு முரணாண விடையமாகும். 

தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளை சட்டத்திற்கு  முரணணாக கேள்வி கோரப்படும் போது மாட்டிறைச்சிக்; கடைகளை கடைக்காரர்கள் அதிக குத்தகைக்கு பணம் செலுத்தி பெற வேண்டிய நிலல ஏற்படுகன்றது.

இதனால் இறைச்சிக் கடைக்காரர்கள் பாவனையாளர்களுக்கு இறைச்சயை அதிகவிலைக்கு விற்க வேண்டிய நிலை எற்படுகின்றது. இதனால் பாவனையாளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனா.

எனவே தனியார் கட்டிடங்களில்  இயங்கும் மாட்டிறைச்சிக்  கடைக்காரர்களுக்கு ;மாநகர சபையினால் வழங்கப்படும் வியாபார அனுமதிப் பத்திரத்துக்கான கட்டணம் மட்டுமே அறவிடப்படவேண்டும்.

ஆகவே மேற்படி விடையம் சம்பந்தமாக  தனியார் கட்டிடங்களில் இயங்கம் மாட்டிறைச்சிக் கடைக்காரர்களின் கேள்வி கோரல் மூலம் குத்தகைக்க வழங்கும் சட்ட திட்டங்கள் . அல்லது துணைவிதிகள் ஏதாவது இருப்பின் எனக்கு அறியத்தரவும.; 

மேலும் இக்கடிதத்திற்கு உரிய பதிலை எழுத்து மூலமாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அந்தக்கடிதத்தில குறிப்பிடப்படடுள்ளது. 

No comments

Powered by Blogger.