மன்னார் நகரசபையில் மர நடுகை தினம்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
தேசிய ரீதியில் செயற்படுத்தப்படும் இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ளூராட்சி வாரத்தின் ஐந்தாம் நாளாளான கடந்த வெள்ளிக்கிழமை (25.10.2013) மர நடுகை தினமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மன்னார் நகரசபையின் தலைவர் .எஸ்.ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு நகரசபை உப- தலைவர், உறுப்பினர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் நகரசபை செயலாளர் , நகரசபை உத்தியோகத்தர்களும் சூழல் சுற்றாடல் உத்தியோகத்தர், நூலக ஆலோசகர், டாக்டர்.எஸ்.லோகநாதன் , உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் பொறியியல் பிரிவு பணிப்பாளர் எந்திரி. என்.ரி.எம். சிராஜீதீன் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
மன்னார் பொது நூலகத்தில் நடை பெற்ற மரநடுகை பற்றிய சிறப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து பொது நூலக வளாகம் மற்றும் அதனை அண்மித்த எஸ்பிளெனட் வீதி ஆகிய இடங்களில் பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment