Header Ads



மர்ஹூம் MI அஹமட் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் காத்தான்குடி அணியிடம்...!


(சுலைமான்  றாபி) 

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும்,  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான மர்ஹூம் அல்ஹாஜ்  MI அஹமட் அவர்களின் ஞாபகார்த்தமாக நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகம் நடாத்திய கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் காத்தான்குடி விளையாட்டுக்கழகம் சம்பியனானது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 10,000/= ரூபா பணப்பரிசும், வெற்றிக்கேடயமும், இரண்டாம் நிலையினை பெற்ற நிந்தவூர் லகான் அணிக்கு 6,000/= ரூபா பணப்பரிசும் வெற்றிக்கேடயமும் வழங்கி  வைக்கப்பட்டது. 

லகான் விளையாட்டுக்கழகத்தின் முகாமையாளர் றிலா இப்ராஹிம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதான பொலிஸ் பரிசோதகர்  ML றபீக், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எ. நசீர் அஹமட் மற்றும் இன்னும் பல அதிதிகளும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை மர்ஹூம் அல்ஹாஜ்  MI அஹமட் அவர்கள் கடந்த 1994 - 1998ம் ஆண்டு காலப்பகுதியில் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.