Header Ads



ரஷ்யாவில் குர்ஆன் மொழிபெயர்ப்புக்கு தடை

(Tn) ரஷ்ய நீதி மன்றம் ஒன்று புனித அல்குர் ஆன் விளக்க வுரை மொழி பெயர்ப்பு நூலை தடை செய்ய உத்தரவிட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இறைத்தூதர் முஹம்மத் நபியின் ஹதீஸ் தொகுப்பு நூலுக்கும் ரஷ்யா தடை விதித்திருந்தது. இந்த நடவடிக்கை நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தும் என ரஷ்யாவின் இஸ்லாமிய அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

தெற்கு ரஷ்யாவின் நொவரொசிங்க் நகர நீதிமன்றம் மத அறிஞர் எம்மிர் குலியேவ் எழுதிய அல் குர்ஆன் விளக்கவுரை நூலுக்கு கடந்த செவ்வாய் க்கிழமை தடை விதித்தது. இந்த மொழி பெயர்ப்பில் உள்ளடக்கப்பட்டிருப்பவை ரஷ்யாவின் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.