வடக்கிலுள்ள முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை - பசில் ராஜபக்ஷ
வடக்கிலுள்ள சிறுபான்மையினரான சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது தேர்தலை இலக் காக கொண்டு முன்னெடுக் கப்பட்டதொன்றல்ல. அது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகின்றோம். வட மாகாணத்தின் புதிய முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகம் அந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமென தான் நம்புவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மூன்று மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியானதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டிருந்தது. இதன்போது அங்கு வருகை தந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கில் மக்கள் தமது வீடுகளிலிருந்து சுதந்திரமாக வெளியே சென்று வாக்களிக்க முடிந்துள்ளமைக்கு இராணுவத்தினரே காரணம். இராணுவத்தினரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இன்று மக்கள் சுதந்திரமாக தமது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட முடியாமல் போயிருக்குமென்பதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.
RAANUVATTHIN OTTHULAIPPU KIDAITTHU IRUKKAAVIDDAAL INTHA EALU -7- AASANAM KALUM KIDAITTHU IRUKKAATHU ENBATHUM UNMAI...DERTHALUKKU PIN ONRUM NAGARAATHU ENRU SONNAVAR INRU OTTHULAIPPU VALANGKUVATHUM MUNNETRAM THAAN...
ReplyDelete