தயாசிறிக்கு 336,327 வாக்குகள் - பிரதமரின் மகனுக்கு 10,7644 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பல்டி அடித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஐயசேக்கர 336,327 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த தகவல் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபுர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
(Hafeez)
அதேவேளை கண்டியில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன அவர்களின் புத்திரன் சட்டத்தரணி அனுராதா ஜயரத்ன அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவித்துள்ளன. கண்டி தெரிவத்தாட்சி அதிகாரியால் இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்காத போதும் ஐ.மு.சு.கூ சார்பாகப் போட்டியிட்ட அவர்ஒரு இலட்சத்து ஏழாயிரத்து அருநூற்றி நாற்றத்தி நான்கு (10,7644) விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பதாகத் தெரிய வருகிறது.
Post a Comment