Header Ads



கோல்ட் மொடல் ஐபோன் - அள்ளிச் சென்றனர் அமெரிக்கர்கள்


தங்கத்தில் மொபைல் போன் விற்பனைக்கு வந்தால் யாராவது விடுவார்களா?  ஆப்பிள் நிறுவனம் திடீரென நேற்று தங்கத்திலான மாடல் ஐபோன் வெளியிட்டது.

வெளியிட்ட சில மணி நேரத்தில் நியூயார்க ஷோரூமில் 1400 பேர்  அள்ளிச்சென்றனர். 5எஸ் மற்றும் மலிவு விலை என்று கூறி 5சி மாடல் மொபைல்களை சமீபத்தில் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், திடீரென தங்கம் மாடல் மொபைல் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கியூவில் நின்ற பாதி பேருக்கு மொபைல் போன் கிடைக்கவில்லை. ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டனர். இந்த மொபைல் விலை ஸி55 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது. இதையும் இந்தியா, சீனாவில் தங்கம் மோகம் அதிகம் என்பதால் அங்கு சந்தையை பிடிக்க சரியான வழி  என்று ஆப்பிள் நிறுவனம் இப்படி திடீர் இன்ப அதிர்ச்சி தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கம் மாடல் போனில் மேல் தகடு மட்டும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அது உண்மையான தங்கம் தானா என்றும் தெரியவில்லை.

No comments

Powered by Blogger.