தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பணியாட் குழுவினர்களுக்கான கொடுப்பணவுகள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பணியாட் குழுவினர்களுக்கான கொடுப்பணவுகள் பற்றிய விவரங்களை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளர்.
கொடுப்பணவு பற்றிய விவரம் வருமாறு,
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் - ரூபா. 2750.00
மேலதிக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் - ரூபா. 2250.00
மேலதிக கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் - ரூபா. 1700.00
கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் எழுதுநர் – ரூபா. 1600.00
கனிஷ்ட ஊழியர் - ரூபா. 1150.00
வாக்குப் பெட்டிகளை விநியோகித்தல் கையேற்றல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பணவு பற்றிய விவரம் வருமாறு,
உதவி தெரிவத்தாட்சி அலுவலர் - ரூபா. 750.00
சிரேஷ்ட/கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்
மற்றும் எழுதுநர் - ரூபா. 650.00
கனிஷ்ட ஊழியர் - ரூபா. 500.00
வாக்கெண்ணல் மற்றும் முடிவுகளை வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பணவுகள் பற்றிய விவரம் வருமாறு,
உதவி தெரிவத்தாட்சி அலுவலர் - ரூபா. 3500.00
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் - ரூபா. 2250.00
கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்/ எழுதுநர் - ரூபா. 1950.00
கனிஷ்ட ஊழியர் - ரூபா. 1150.00

Post a Comment