அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்துக்கு ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை
(ஏ.எல்.ஜனூவர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குற்பட்ட அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்துக்கு நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரைக்கும் ஆங்கிலம் கற்பிப்பதற்க்கு ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படவில்லையென மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் விசனம் அடைந்துள்ளனர்.
வலயக் கல்விப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசியர் வலயக் கல்விப் பணிப்பாளரின் கடிதத்தை புறக்கணித்து அதே பாடசாலையில் கையொப்பமிட்டு கடமை புரிந்து வருகின்றார்.
இவ்வலயப் பாடசாலைகளில் மித மிஞ்சிய ஆங்கில ஆசிரியர்கள் கடமை புரிந்து வரும் இவ்வேளையில் இப்பாடசாலையின் ஆங்கில கல்வி வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலை கல்வியிலும், விளையாட்டிலும் மிகச்சிறப்பாக முன்னேறி வரும் இவ்வேளையில் ஆங்கில ஆசிரியர் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.
இது தொடர்பாக, பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழவினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Post a Comment