விமானத்திலிருந்து விழுந்த அணு குண்டு - தப்பியது அமெரிக்கா
(Tn) அமெரிக்காவில் விழுந்த அணு குண்டொன்று தற்செயலாக வெடிக்காமல் மயிரிழையில் தப்பியுள்ள ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1961ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி அமெரிக்க யுத்த விமானங்களில் ஒன்றான பீ-52 ரக விமானம் இரு ஐதரசன் குண்டுகளை காவியபடி ரோந்து வந்தபோது வடக்கு கரோலினாவில் கட்டுப்பாட்டை இழந்து இரு குண்டுகளும் தரையில் விழுந்துள்ளன. இதில் ஒரு அணு குண்டு வெடிக்கும் தறுவாயை எட்டியிருந்தபோதும் மயிரிழையில் அது தப்பியுள்ளது.
இந்த குண்டை வெடிக்கச் செய்வதற்கான ஒரு கிளிப் தட்டுப்பட்டபோதும் மற்றையது தட்டுப்படாததால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசினால் நான்கு தசாப்தங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ரகசியத்தை புலனாய்வு ஊடகவியலாளரான எரிக் ஸ்கிளோசர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தகவல் பெறும் சுதந்திர சட்டத்தின் கீழே இந்த ரகசிய ஆவணம் பெறப்பட்டுள்ளது. குறித்த குண்டு வெடித்திருந்தால் உலக வரலாறே மாறி இருக்கும் என்று ஸ்கிளோசர் விபரித்துள்ளார்.
வெடிக்காமல் தப்பிய இந்த அணு குண்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வெடித்ததை விடவும் சுமார் 260 மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.

Post a Comment