சுவிட்சர்லாந்தின் டிசினோ பிராந்தியத்தில் நிகாப்புக்கு தடை
(Tn) சுவிட்சர்லாந்தின் இத்தாலி மொழி பேசும் பிராந்தியத்தில் முகத்திரையுடன் நிகாப் அணிவதை தடை செய்ய அந்த பிராந்திய மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனினும் இதற்கு நாட்டில் முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் தெற்கு மாநிலமான டிசினோவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் 65 வீதமானோர் பொது இடங்களில் நிகாப் அணி தடை விதிப்பதற்கு ஆதரவளித்துள்ளனர். பிரான்ஸ், பெல்ஜியத்தில் இவ்வாறான தடை ஏற்கனவே அமுலில் உள்ள நிலையிலேயே தற்போது சுவிட்சர்லாந்தின் அறிமுகமாகியுள்ளது.
8 மில்லியன் சனத்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் மிகச் சிறிய மாநிலமான டிசினோவில் 350,000 மக்கள் வாழ்கின்றனர். சுவிட்சர்லாந்தில் சுமார் 400,000 முஸ்லிம்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment