Header Ads



எகிப்தின் இராணுவ அரசியலமைப்பு சாத்தானிய குழுக்களுக்கு சுதந்திரம் வழங்குகிறது

(Tn) எகிப்தின் புதிய அரசியலமைப்பு நாட்டில் முறையற்ற பாலியல் உறவு மற்றும் ஒருபால் உறவை ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக அந்நாட்டின் ஜமா அல் இஸ்லாமியா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அரசியல் அமைப்பின் கட்டுரை 3 இல் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தத்திற்கு அமைய எகிப்து நாட்டு கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்வு முறையில் தமது மதச் சட்டங்களின்படி செயற்பட அனுமதி அளிக்கிறது. இந்த கட்டுரைக்கு அமைய எந்த வரையறுக்கப்பட்ட தெளிவுபடுத்தலும் இன்றி இஸ்லாம் அல்லாத நம்பிக்கை களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி அளிக்கிறது.

இதன்மூலம் எகிப்தில் ஒருபால் திருமணம் அல்லது முறையற்ற பாலியல் உறவுக்கு வழி வகுக்கிறது என்று ஜமா அல் இஸ்லாமியா வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரை உள்நாட்டு சட்டத்தில் நாத்திகர்கள், சாத்தானிய குழுக்களுக்கு சுதந்திரம் வழங்குகிறது. இது நாட்டின் மத மற்றும் ஒழுக்க விழுமியங்களை மோசமாக பாதிக்கிறது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தம் பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் ஜமா அல் இஸ்லாமிய விபரித்துள்ளது.

அரசியலமைப்புக்குழு எகிப்து மக்களின் மத மற்றும் தார்மீக பெறுமா னங்களை கருத்தில் கொள்ளவில்லை என்று அந்த அமைப்பு குற்றம்சாட் டியுள்ளது.

No comments

Powered by Blogger.