புத்தளத்தில் வாக்குச்சீட்டுக்கள் மீட்பு - தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ய வேட்பாளர்கள் கோரிக்கை
வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களே 24-09-2013 மீட்கப்பட்டுள்ளன.
புத்தளம் சென். அன்ருஸ் கல்லூரியிலிருந்தே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரி வாக்கெண்ணும் நிலையமாக இருந்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை காணப்பட்டது.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் இம் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ய வேண்டுமென தெரிவத்தாட்சி அதிகாரியைக் கேட்டுள்ளனர்.

Post a Comment