துருக்கியில் பொலீஸ் கட்டிடத்தின் மீது ராக்கெட் வீச்சு
துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் அடுத்து அடுத்து மூன்று முறை ராக்கெட் வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.இச்சம்பவத்தில் அந்த போலீஸ் தலைமையக கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் நடக்கவில்லை.துருக்கியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில் இத்தாக்குதலுக்கு யார் பொறுப்பு ஏற்கிறார்கள் என்பது தெரியவில்லை.

Post a Comment