ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்படுமா..? இஸ்ரேல் அச்சம்
அமெரிக்காவும், ஈரானும் 30 ஆண்டுகளுக்கு மேலாக பகை நாடுகளாக உள்ளன. ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் கருதுகின்றன.
ஆனால் மின் உற்பத்திக்காக மட்டுமே அணு உலைகள் பயன்படுத்தப்படுவதாக ஈரான் கூறி வருகிறது. ஈரானில் புதிய அதிபராக ரவுஹானி பதவி ஏற்ற பின்பு அவர் தனது ஆட்சிக்காலத்தில் ஈரானில் அணு ஆயுதம் தயாரிக்கப்பட மாட்டாது என கூறி உள்ளார்.
இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஈரான் அதிபர் ரவுஹானி கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அச்சம் வெளியிட்டுள்ளது. ஆனால், ஈரான் தனது அணு ஆயுதத்திட்டங்களை குறைத்துக்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்காதது வரையில், அதன் மீதான பொருளாதார தடைகளை நீக்கும் வாய்ப்பு இல்லை என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் உறுதிபட கூறுகின்றன.

Post a Comment