கென்ய வணிக வளாக பிணைக் கைதிகள் மீட்கும் போராட்டம் தொடருகிறது (வீடியோ)
கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள வணிக வளாகத்தில் மூன்றாவது நாளாக நேற்றைய தினத்திலும் ஆயுததாரிகள் பிணைக் கைதிகளை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதோடு, அங்கு துப்பாக்கி மற்றும் வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன.
கடந்த சனிக்கிழமை ஆரம்பமான தாக்குதல்களில் இதுவரை 69 பேர் கொல்லப்பட்டதோடு, 170 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
வணிக வளாகத்தின் மேக்கு வாயில் பகுதியில் 10 முதல் 15 ஆயுததாரிகள் தொடர்ந்து தரித்து நின்று தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சோமாலியாவின் அல் ஷபாப் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு கூறியுள்ளது.
எனினும் வணிக வளாகத்தை ஒட்டிய பகுதியில் கடுமையான மற்றும் தொடர்ச்சியான தீப்பிளம்பு வெளிப்பட்ட வண்ணம் இருப்பதாக அங்கு இருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவர அந்த பகுதியை சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எனினும் வணிக வளாகத்திற்குள் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில் பெரும்பாலான பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுவிட்டதாகவும் வணிக வளாகத்திற்குள் நுழைந்திருக்கும் இராணுவம் கட்டிடத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கென்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது பல உடல்களும் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடக மாநாட்டில், “குற்றவாளிகள் கட்டிடத்தின் ஒரு பகுதிக்குள் முடக்கப்பட்டுவிட்டனர். கட்டிடத்திற்குள் இருக்கும் படையினர் இந்த தீவிரவாதிகளை கட்டுப்படுத்திவிடுவார்கள்” என்றார்.
அத்துடன் இந்த சம்பவத்தில் தனது மருமகன் மற்றும் அவரது காதலியும் கொல்லப்பட்டதாக கென்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் மூன்று பிரிட்டன் நாட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டபோது குறித்த வணிக வளாகத்தில் 1000 க்கும் அதிகமானவர்கள் இருந்துள்ளனர். அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி திட்ட நிறுவனத்தில் பணிபுரிபவரின் மனைவியும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். கானா நாட்டு பிரபல கவிஞர் கொபி அவூனோரும் பலியாகியுள்ளார். சீனா, பிரான்ஸ், போர்த்துக்கல், தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் கனடா நாட்டவர்களும் இச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
அல் ஷபாப் அமைப்புக்கு எதிராக கென்ய படைகள் சோமாலியாவில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்துவதாக அல் ஷபாப் குறிப்பிட்டுள்ளது.
சோமாலியாவிலிருந்து படைகளை வாபஸ் பெற அழுத்தம் கொடுத்துவரும் அல் ஷபாப் முன்னரும் கென்யாவில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. சுமார் 4000 கென்ய படைகள் தெற்கு சோமாலியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் அல்ஷபாபுக்கு எதிராக போராடி வருகிறது. tn
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Ac5s-WM1Pw0

Post a Comment