Header Ads



தான் வளர்க்கும் கழுதைக்கு ராணுவத் தளபதியின் பெயரை வைத்த விவசாயி கைது

எகிப்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அந்நாட்டு அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் சச்சரவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. மோர்சியின் பதவி இறக்கத்திற்குக் காரணமாக இருந்த ராணுவத் தளபதி அப்டெல் ஃபட்டா அல் சிசி தற்போதைய அரசின் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், ராணுவத் தலைமைப் பதவியையும் வகிக்கின்றார்.

எகிப்து நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே பிரபலமாக இருக்கும் சிசியின் ஓவியங்கள் அங்குள்ள கடைகளிலும், புகைப்படங்கள் மக்களின் வாகனங்களிலும், சுவரொட்டிகளிலுமாக நாடு முழுவதும் காணப்படுகின்றது. ராணுவத்தினரை எதிர்க்கும் மோர்சி ஆதரவாளர்களையும் அந்நாட்டு அரசு அடக்கி வருகின்றது.

இந்நிலையில், எகிப்தின் மத்தியப் பகுதியில் உள்ள குயினா மாகாணத்தைச் சேர்ந்த ஒமர் அபு அல் மகத் அலி அல் சகிர்(31) என்ற விவசாயி தான் வளர்க்கும் கழுதைக்கு அந்நாட்டு ராணுவத் தளபதியின் பெயரை வைத்துள்ளார். இவர் நேற்று அந்தக் கழுதைக்கு ஒரு தொப்பியையும் அணிவித்து அவர்கள் கிராமத்தின் வழியே அழைத்துச் சென்றதால் நேரடியாக ராணுவத் தளபதியை அவமதிப்பதாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பத்திரிகை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.