மனைவிக்கு பயந்த ஒபாமா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் மனித சமூகத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்ட முடிவில், ஒபாமாவிடம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் சிகரெட் பிடிக்கிறீர்களா? என கேட்டார். அதற்கு புன்முறுவல் செய்தபடி ஒபாமா பதில் அளித்தார்.
அப்போது பொதுவாக கடந்த 6 ஆண்டுகளாக நான் சிகரெட் பிடிப்பதில்லை. ஏனெனில் நான் எனது மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன்’’ என்றார்.
ஒபாமாவின் இந்த உரையாடலை அங்கிருந்த சி.என்.என். டி.வி. நிருபர் வீடியோ எடுத்து அதை ஒளிப்பரப்பினார்.
நீண்ட நாட்களாக ஒபாமாவுக்கு அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது அவரது தந்தையிடம் இருந்து வந்த பழக்கம் என ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அவர் படிப்படியாக மாற்றிக் கொண்டார்.
கடந்த 2008–ம் ஆண்டு முதன் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது பிரசாரத்தின் போது அவரது சிகரெட் பிடிக்கும் விவகாரம் குறித்து ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அதிபர் பதவி ஏற்ற முதல் ஆண்டு நிறைவின் போது புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து 25 சதவீதம் மீண்டு விட்டதாக தெரிவித்து இருந்தார்.
2010–ம் ஆண்டு டிசம்பரில் ஒபாமா கடந்த 9 மாதங்களாக சிகரெட் பிடிக்கவில்லை என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அதை தொடர்ந்து பொது மக்களிடம் உடல் நலம் குறித்து பேசிய அவரது மனைவி மிச்செலி தனது கணவர் 2 மகள்கள் முன்பு சிகரெட்டை தொடுவது கூட இல்லை என்றார்.
2011ம் ஆண்டு பிப்ரவரியில் தனது கணவர் ஒபாமா ஒரு வருடமாக சிகரெட் பிடிப்பதில்லை என சான்று அளித்தார்.

Post a Comment