Header Ads



யூசுப் அல் கர்ளாவியை கைதுசெய்யுமாறு பிடியாணை

(Tn) முன்னணி இஸ்லாமிய அறிஞரான யூசுப் அல் கர்ளாவியை கைது செய்ய எகி ப்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கட்டாரை மையமாகக் கொண்டு இயங்கும் கர்ளாவி எகிப்து பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாகவும் நாட்டு விவகாரங்களில் தலையிடுவ தாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹமட் முர்சியை பதவி கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியை கர்ளாவி கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.