சிரியா மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தில்தான் அமெரிக்கா இருக்கிறது - ரஷ்யா
சிரியாயாவில் பொதுமக்கள் மீது ரசாயனக் குண்டுகளை வீசி 1429 பேரை கொன்றதாக ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க ஆயுத்தமாகி வருகிறது. ஆனால் ரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா அரசு ஒப்புக்கொண்டதையடுத்து அமெரிக்கா தாக்குதல் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன், சிரியா குறித்து ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுகுறித்து ரஷ்யா துணை வெளியுறவு மந்திரி ரியாப்கோவ் கூறியதாவது:-
சிரியா விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றுகொண்டிருக்கவில்லை என்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. சிரியா குறித்த எங்களது ரசாயன ஆயுத உடன்படிக்கை அமெரிக்காவின் போர் தொடுக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தி இருக்கலாம்.
ரசாயன ஆயுதங்களை கைவிடுவதற்கான சிரியா உடன்படிக்கைக்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ரஷ்யா நம்புகிறது. இருந்தும் அதற்கு உத்தரவாதமில்லை.
சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. சர்வதேச விதிமுறைகளை மீறி சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் அவர்களது முயற்சி தாமதப்படலாம். ஆனால் அதை ஒதுக்கித் தள்ள முடியாது.
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சிரியா அதிபர் ஆசாத் மீது போர் தொடுக்க போவதாக மிரட்டுவதை நாங்கள் கண்டிக்கிறோம். குற்றச்சாட்டுகளை ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரியா ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், அந்நாட்டின் மீது ஏதேச்சதிகாரத்துடன் நடவடிக்கை எடுக்க கோரும் தீர்மானத்தை நாங்கள் ஏற்கப்போவதில்லை.
விதிமுறைகளுக்கு உட்பட்டு சர்வதேச ரசாயன ஆயுதத் தடுப்பு கூட்டத்தில் சிரியா நடந்து கொள்ளும் என்று முன்னரே அறிவித்துள்ளது.

Post a Comment