Header Ads



பாகிஸ்தானில் பூகம்பம் - 80 பேர் மரணம்

பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக கட்டடம் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தினை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்க்த்தில் 80 பேர் பலியானார்கள். நேற்று 7.7 என்ற ரிக்டர் அளவில் பாகிஸ்தானை மையாக வைத்து கடுமையான பூகம்பம் உருவானது.

இந்த பூகம்பத்தில் 80 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தின் அவரான் மாவட்டத்தில் தான் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கராச்சி, ஐதராபாத், லர்கானா மற்றும் சிந்து மாகாணத்தின் ஒரு சில நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. லாகூர், ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில நிமிடங்கள் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் அலறியடித்து வெ‌றியேறினர்.

கடந்த அக்டோபர் 2005ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கரமான பூகம்பத்தில் 75 ஆயிரம் பேர் பலியானார்கள். கடந்த ஏப்ரல் மாதம் கராச்சி மற்றும் சில நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.