மன்னார் - எருக்கலம்பிட்டியில் கிணற்றில் விழுந்து 2 சிறுவர்கள் வபாத்
மன்னார் எருக்கலம்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த முஜீப் முசாபிர் (03) மற்றும் இக்ரம் ஹஸ்மில் (04) ஆகிய இரு சிறுவர்களுமே மரணமானவர்களாகும்.24-09-2013 பிற்பகல் விளையாடிக் கொண்டிருந்த மேற்படி இரு சிறுவர்களையும் காணவில்லையென பெற்றோர் தேடியபோது இருவரும் பாலடைந்த கிணறு ஒன்றுக்குள் வீழ்ந்து கிடந்துள்ளனர் உடநடியாக அயலவர்களின் உதவியுடன் இருவரையும் மீட்டெடுத்தபோது இருவரும் உயிரிழந்து காணப்பட்டனர்.
மன்னார் மாவட்ட நீதிபதியின் உத்ரவின் பெயரில் மன்னார் பொலிஸார் இருவரது உடல்களையும் மன்னார் பொது வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைத்திய பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment