வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு யாழ் ஜூம்மா பள்ளிவாசல் இமாம் வாழ்த்து
(பாறூக் சிகான்)
கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் நல்லாட்சி மேற்கொள்ள வேண்டுமென யாழ் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மஹ்மூத் பலாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தெரிவித்துள்ள ஊடக அறிக்கையில்,
நடந்து முடிந்த தேர்தலில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.அதில் சி.வி விக்னெஸ்வரன் ஆகிய நீங்கள் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். தற்போது இவ்வெற்றியை கொண்டாடும் உங்களுக்கும் ஏனைய கட்சி அங்கத்தவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
மேலும் இவ்வெற்றியில் யாழ் முஸ்லீம் மக்களும் கணிசமான பங்களிப்பகளை வழங்கியுள்ளனர். இந்த வெற்றியானது அவர்களது முகங்களிலும் காணப்படுவதை உணர்கிறேன்.
இந்தவகையில் வட மாகாண முதல்வருக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அல்லாஹ் நல்லருளை தர வேண்டும் என பிராத்திப்பதோடு நல்லாட்சி நடைபெற வாழ்த்துகின்றேன் என தெரிவித்தள்ளார்.

Yes, we all Muslims except 'few of our political jokers & political cheaters' are happily wishing TNA & Mr.Vigneswaran to show the real political in our country & also to be high class example to other politicians...
ReplyDelete