Header Ads



யாழ்ப்பாணத்தில் 21 கோயில்களை கட்டிக்கொடுத்தும் தோல்வியடைந்த முஸ்லீம் வேட்பாளர்

வட மாகாண சபை தேர்தலில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட எம்.சிராஸ்  3323 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
 
தேர்தல் ஆரம்பமாவதற்கு முன்னர் தன்னை ஜனாதிபதியின் நேரடி வேட்பாளராக அறிமுகப்படுத்தி மக்கள் முன் தனது பிரசாரப்பணிகளை மேற்கொண்டநிலையில் திடிரென இடைநிறுத்தப்பட்டார்.

ஆனாலும் அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கும் மற்றுமொரு கட்சியான அமைச்சர் ரிசாட் பதியுதினின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  மக்களின் போராட்டம் மற்றும் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
 
இது தவிர இவரது பிரச்சார நடவடிக்கைக்கு ஆதரவாக அரசாங்க அமைச்சர்கள் பலர் வருகை தந்து பிரசாரங்களை மேற்கொண்டனர்.
 
ஆனால் தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை  வேட்டுகளாக சலுகைக்கு இல்லாமல் உரிமை அரசியலுக்காக வாக்களித்து தேர்தல் காலங்களில் அம்மக்களுக்காக கோடிக்கணக்கான செலவுகளை மேற்கொண்ட சிராஸை  தோற்கடித்துள்ளனர்.
 
யாழ் மாவட்டத்தில் சுமார் 21 க்கும் மேற்பட்ட கோயில்களை இவர்கட்டிக்கொடுத்து தனது பிரச்சாரங்களை  தமிழ் மக்கள் மத்தியில்  மேற்கொண்ட போதிலும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.
 
எனினும் யாழ் முஸ்லீம் மக்கள்  வாக்குகளினால் தான் தற்போது கொளரவமான தோல்வியொன்றினை சந்தித்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4 comments:

  1. Tamils are Tamils only. Where is that Bumi Rahimulla? He has nothing to comment on this?

    ReplyDelete
  2. இவர் மட்டுமல்ல, இது போன்று இன்னும் பலர் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.

    21 கோயிலகள், அல்லாஹ் இதனைப் பொருந்திக்கொள்வானா?????? உலக சீட்டுக்காக மறுமை சீட்டைக் கிழிக்கும் கூட்டம் இருக்கும் வரை இலங்கை முஸ்லிம்களுக்கு உரிமை கிடைக்காது.

    ReplyDelete
  3. கோவில் கட்டிப் புண்ணியம் தேடுவதை விட்டு அப்பணத்தை, ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாத,மாற்றுடுப்பு இல்லாமல், வீடில்லாமல் எத்தனையோ மக்கள் அம்மாவட்டத்தில் இருக்கிறார்கள் அவர்களுக்கு கொடுத்திருந்தால் இன்மை, மறுமை பயனாவது கிடைத்திருக்கும். இது வீண் பெருமைக்காக செய்தவற்றின் பிரதிபலன் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  4. kodikkanakkil selavu seitharam. eththana kumarhalukku kaliyanam seithu vaiththu irukkalam?

    ReplyDelete

Powered by Blogger.