Header Ads



குருநாகல் மாவட்ட முஸ்லிம் பிரதிநித்துவம் 4 இல் இருந்து ஒன்றுக்கு வீழ்ந்தது

(இ. அம்மார்)

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைக் கொண்ட இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து போட்டியிட்ட போது நான்கு ஆசனங்களைப் பெற்றிருந்தன. இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 11533 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே இருந்த  மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் தோல்வி அடைந்துள்ளனர். அதில் ஒரு உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஹமட் தஸ்லிம் மற்றைய இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட  நஷர் மற்றும் அலவி ஆகிய இருவருமே தோல்வி அடைந்துள்ளனர்.

இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒருவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் ஐந்து பேரும், முஸ்லிம் காங்கிரஸில் ஐந்து பேரும் போட்டியிட்டனர்.

2 comments:

  1. enge koodik kudukke kilekkule erunthu ponevenugel

    ReplyDelete
  2. ithu thirumba thirumba eluthappadum varalaaru. koodiya uruppinar pera UNP and SLMC kootu sera venrum. Athukku Hakeem Ranilukku katchiya eluthikk kuduththu vittar enru enna mathiri thullinanuhal. Ippa mahindakku sooram poittar enru eluthuranuhal.

    veenda pondatti kal patta kutram kai patta kutram.

    23 members UPFA kku kidaithum Saththar hajiyarku vara mudiyala enna ithula oru padam irukku. vettilaikku keerum votes aathula pottathukku saman.

    thaniya ninnu members petru pinnar "theru nayodayo" "sori nayaodayo" kootu seranum. ethu eppidi irunthalum koottu nayoda than...

    ReplyDelete

Powered by Blogger.