Header Ads



டுவிட்டரில் கலக்கும் சவூதி அரேபியாவின் மார்க்க அறிஞர்கள்

(Inne) ட்விட்டர் போன்ற நவீன சமூக வலைத்தளங்களில் இந்தியா போன்ற நாடுகளில் நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் அதிக அளவில் தொடர்பாளர்களையும் நட்பு வட்டங்களையும் பெற்றிருக்கையில், அரபுலகில், குறிப்பாக சவூதி அரேபியாவில் மத அறிஞர்களே அதிக அளவில் பின்தொடரும் நேயர்களைப் பெற்றுள்ளனர் என்று சவூதி அரேபியச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அப்பட்டியல் படி, சவூதி அரேபியாவின் இஸ்லாம் மதப் பிரச்சாரகர் முஹம்மது அல் உரைஃபி என்பவர் 60 இலட்சத்திற்கும் அதிகமான தொடர் நேயர்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆயித் அல் கர்னீ என்னும் மத அறிஞர் சுமார் 40 இலட்சம் தொடர் நேயர்களைப் பெற்றுள்ளார். 3,909,538 நேயர்களுடன் அஹ்மத் அல் சுகைரி என்னும் லெபனானிய மத அறிஞர், அமெரிக்காவில் கல்வி பயின்றவர், மூன்றாவது இடத்திலும், சல்மான் அல் அவ்தா என்னும் மதப் பிரச்சாரகர் 3,327,952 பின்தொடர் நேயர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

முதல் நான்கு இடங்களை மத அறிஞர்களே பெற்றிருக்கையில், ஐந்தாவது இடத்தில் ஜோர்டான் அரசி ரானியா 2,858,456 நேயர்களை பின் தொடர்பாளர்களாகப் பெற்றுள்ளார். குவைத்தின் மத அறிஞர் நபீல் அல் அவாதிக்கு ஆறாவது இடமும், தாரிக் அல் ஹபீப் என்னும் அறிஞர் அதற்கடுத்த இடமும் பிடித்துள்ளனர்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயின் ஆட்சியாளர் ஷெய்க் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் இப்பட்டியலில் பத்து இடங்களுக்குள் வந்த மற்றொரு அரசியல் பிரமுகராக உள்ளார். அவருக்கும் முன் இப்பட்டியலில் எட்டாவது இடத்தை குவைத்தின் மிஷாரி அல் அஃபாஸி என்னும் குர்ஆன் ஓதுகலை வல்லுநர் பிடித்துள்ளார்.

பிரபல லெபனான் பாடகி நான்சி அஜ்ரமுக்கு பத்தாவது இடம் தான். அவருடைய பின்வருநேயர்களின் எண்ணிக்கை 1,789,132 என்றும் அந்தப் பட்டியலில் காணப்படுகிறது.

No comments

Powered by Blogger.